"சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" - இயேசு

Tuesday, 13 May 2014

கர்த்தர் சிறு பகுதியின் எல்லை தெய்வமா?


தேவப்பிரியா அடிக்கடி சொல்லி வருகின்ற வாக்கியம், "கர்த்தர் சிறு பகுதியின் எல்லை தெய்வம்". ஏன் இதைச் சொல்கிறார்...? கிறித்தவர்களுக்கு மனக்கவலை உண்டாக்கி மகிழவா? அல்லது கர்த்தரை இழிவுபடுத்துவதற்காகவா? எதுவாயிருந்தாலும் சரி, அதற்கு பதில் இதுதான்...

தேவப்பிரியா என்ன இவ்வாறு சொல்வது, உலகில் பாதி பேர் உயிராய் நேசிக்கும் இயேசுவே அப்படித் தான் சொன்னார். எனவே, அதனை ஏற்றுக் கொள்வதில் கிறித்தவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இயேசு சொன்ன கீழுள்ள வசனங்களைப் படிக்கவும்,

யோவான் 4:21-24 - அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளும் காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படி பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாய் இருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment