"சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" - இயேசு

Tuesday, 13 May 2014

ஒட்டகங்கள் முற்பிதாக்களின் காலத்தில் பயன்பாட்டில் இருந்தனவா?

தேவப்பிரியா சொல்கிறார்,
ஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தி பயன்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே தான்.

இதிலிருந்து தேவப்பிரியாவுக்கு பிடித்த வரலாற்று பேராசிரியர் ஃபின்கெல்ஸ்டீன் என்பது தெளிவாகிறது. இவர் "த பைபிள் அனெர்த்திட்" என்ற நூலை எழுதியவர். இந்த நூல்படி கி.மு 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தற்போது பழைய ஏற்பாட்டிலுள்ள கதைகள் எல்லாம் எழுந்தன என்கிறார். இவருக்கு மறுப்பு தெரிவித்து பல வரலாற்று பேராசிரியர்கள் நூல்களை எழுதியுள்ளனர். தேவப்பிரியாவோடு சேர்த்து அவருக்கு பிடித்த நூலை எழுதிய ஃபின்கெல்ஸ்டீன் அவர்களது மேற்கோளையும் கணக்கில் சேர்த்து கொள்ளலாம். அப்பொழுது தான் தேவப்பிரியாவும் ஃபின்கல்ஸ்டீனும் எவ்வளவு தூரம் சரித்திரத்தை அறிந்தவர்கள் என்பது விளங்கும்.

ஃபின்கெல்ஸ்டீன் சொல்கிறார்,
We now know through archaeological research that camels were not domesticated as beasts of burden earlier than the late second millennium and were not widely used in that capacity in the ancient Near East until well after 1000 BCE. [1]

தமிழாக்கம்: ஒட்டகங்கள் கி.மு 1000க்கு முன்பு மனிதனால் பழு சுமக்கும் வீட்டு பிராணிகளாக பழக்கப்படுத்தப்படவில்லை என்றும் கிழக்கத்திய பகுதிகளில் கி.மு 1000க்கு முன்பு ஒட்டகங்கள் பெரும்பாலாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் அகழ்வாராய்ச்சி மூலம் எங்களுக்கு தெரியும்.

இனி, உண்மையான வரலாறும், வரலாற்று பேராசிரியர்களும் என்ன சொல்கின்றனர் என காணலாம்.

புதிய செய்தி எதையாவது கொண்டு வருவார் என பார்த்தால் தேவப்பிரியா இறந்து புதைந்த செய்தியைக் கொண்டு வந்திருக்கிறார். பரவாயில்லை, தேவப்பிரியாவிற்கு சரித்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதைச் சொல்லி விடலாம். சரித்திர பேராசிரியர்கள் கி.மு 9ஆம் நூற்றாண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காலங்களைக் குறைத்துக் கொண்டு வந்து இறுதியாக பைபிள் கூறுகின்ற காலத்திற்கே மீண்டும் வந்துவிட்டனர். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. "தன் பெயர் கெட்டுவிட்டதே, இதற்கு என்ன பதில் சொல்வது" என தெரியாமல் பின்கெல்ஸ்டீன் உள்ளார். ஆனால் தேவப்பிரியா அதைவிட மோசம். ஏனெனில் அவருக்கு வரலாற்று நிலையே என்ன என்று முதலில் தெரியவில்லை..!

வரலாற்று பேராசிரியர்கள் எவ்வாறு காலத்தைப் பின்னோக்கி கொண்டு வந்து பைபிள் கூறுகின்ற காலத்திற்கே மீண்டும் வந்தனர் என காணலாம்.

பைபிள் படி குறைந்தது கி.மு 20 ஆம் நூற்றாண்டிலேயே ஒட்டங்கங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகும். ஆனால் இது பல காலமாக மறுக்கப்பட்டது.

1) கி.மு 9 ஆம் நூற்றாண்டு:
முதலில் கி.மு 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, ஒட்டகங்கள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படவில்லை என்றனர்.

ரெட்போர் என்ற அறிஞர் பைபிளுக்கு கீழுள்ள மறுப்பு சொன்னார்,

“Anachronisms do indeed abound…camels do not appear in the Near East as domesticated beasts of burden until the ninth century B.C.” [2]

தமிழாக்கம்: "காலத்திற்கு ஒத்து வராத செய்திகள் நிச்சயமாக அதில் உள்ளன.... ஒட்டகங்கள் கிழக்கத்திய பகுதிகளில் கி.மு 9ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பயன்படுத்தப்படவில்லை"

இதையே தான் பின்கெல்ஸ்டீனும் சொன்னார். தேவப்பிரியா சொல்லி வருகிறார்.

2) கி.மு 12 ஆம் நூற்றாண்டு:

Domestic camels on the Black Obelisk of Shalmaneser III,
British Museum. Credit: TM Kennedy

பைபிள் மேலுள்ளவாறு ஏளனம் பேசப்பட்டு வந்தது, ஆனால் மீண்டும் தடம் புரண்டது. கி.மு 12 ஆம் நூற்றாண்டில் பழு தாங்கும் பணிகளுக்கு ஒட்டகங்களை மனிதர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதற்கு திட்டமான ஆதாரங்கள் கிடைத்தன. உடனே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த 9ஆம் நூற்றாண்டை 300 ஆண்டுகள் பின் தள்ளி கி.மு 12ஆம் நூற்றாண்டிலேயே ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என சொன்னார்கள். அதிரடியாக வரலாறு 300 ஆண்டுகள் பின்னோக்கிப் போனது!

ஆனால் அப்பொழுதும் பைபிளுக்கு மறுப்பு வெளியானது, அல்பிரைட் என்ற ஆய்வாளர் சொன்னார்,

“Our oldest certain evidence for the domestication of the camel cannot antedate the end of the twelfth century B.C.” [3]

தமிழாக்கம்: "ஒட்டகங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு கி.மு 12ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய எந்த பழமையான ஆதாரமும் இருக்க முடியாது"

அல்பிரைட் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் மனிதனால் ஒட்டங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான வரலாற்றுச் சுவடு ஒன்று அசீரியாவில் இருந்து கிட்டியது. அது தான் ஒட்டகங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு அன்று கிடைத்த மிகப் பழமையான ஆதாரம். அதை வைத்து அல்பிரைட் மேலுள்ளவாறு பைபிளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

3) கி.மு 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு:
மீண்டும் காலம் மாறினது. ஒட்டகங்கள் கி.மு 12ஆம் நூற்றாண்டிற்கு முன்பே பயன்படுத்தப்பட்டன என ஆதாரங்கள் கிடைக்கத் துவங்கின. அதனால் கி.மு 12ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று பேராசிரியர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஈரானில் கி.மு 12ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன, அங்கிருந்து பிற பகுதிகளுக்கு அவைகள் அனுப்பி வைக்கப்பட்டன என டேனியல் பாட்ஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் வெளியரங்கமாக தெரிவித்தார். [4]

4) கி.மு 16 ஆம் நூற்றாண்டு:

Proto-Sinaitic petroglyph of a man
leading a dromedary camel at Wadi Nasib.
Credit: Younker 1997.

400 ஆண்டுகள் குறைகிறது... கி.மு 16 ஆம் நூற்றாண்டிலேயே ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று பேராசிரியர்கள் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஏன்? கற்பாறையில் தீட்டப்பட்ட ஓவியமொன்றில் ஒரு மனிதன் தன் ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு போகிறான்! அதனை ஆராய்ந்த ஆய்வாளர்கள் அது 16ஆம் நூற்றாண்டில் தீட்டப்படிருக்க வேண்டும் என அடித்துச் சொல்கின்றனர். எகிப்தில் வதிநசிப் என்கிற இடத்தில் இருந்து இந்த ஓவியம் கிட்டியுள்ளது.

5) கி.மு 18 ஆம் நூற்றாண்டு:

Syrian cylinder seal depicting a Bactrian camel. Walters Art Museum.

கி.மு 16 ஆம் நூற்றாண்டு அல்ல, அதற்கு முன்பே ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டுமாம்! வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் ஒரு போராட்டம். கிழக்கத்திய பகுதியில் இருந்து கிட்டிய உருளை ஒன்றில் ஒட்டகங்களை சிலர் ஓட்டிக் கொண்டு போகின்றனர். "அந்த உருளையில் உள்ள மனிதர்கள் தெய்வங்களைப் போல தோற்றமளிக்கிறார்கள் எனவே இது கற்பனை வேலைப்பாடு" என ஒரு சாராரும், "கி.மு 18ஆம் நூற்றாண்டில் மனிதர்களால் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு என்பது உண்மை. இந்த ஆதாரத்தை மறுக்க முடியாது" என மற்றொரு சாராரும் பிரிந்துவிட்டனர்.

6) கி.மு 20 ஆம் நூற்றாண்டு:

Bactrian camel statue from the third to second millenium BC in the
Metropolitan Museum of Art, New York. Credit: TM Kennedy

பைபிள் கூறும் காலத்திற்கே நம் வரலாற்று பேராசிரியர்கள் வருகிறார்கள்... "கி.மு 20ஆம் நூற்றாண்டில் நிச்சயமாக ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டது" என சரித்திர ஆய்வாளர்கள் கோஷமிடுகின்றனர். ஏன்? கயிறுகள் கட்டப்பட்ட வண்ணம் காணப்படும் ஒரு ஒட்டக சிலை செய்த வேலை அது...

7) நிச்சயமாக கி.மு 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு...

Third millenium BC Egyptian petroglyph of a man leading a dromedary camel.
Credit: Ripinsky.

ஆதாரங்கள் குவிய ஆரம்பித்து விட்டது...
  • கி.மு 1950 - 1600: ஒட்டகப் பாலை சுமேரியர்கள் பயன்படுத்தியற்கான வரலாற்று குறிப்பு [5]
     
  • கி.மு 1950 - 1600: மனிதனால் பயன்படுத்தப்பட்ட மிருகங்களுள் ஒட்டகமும் ஒன்று [6]
     
  • கி.மு 2345 - 2181: வடக்கு எகிப்தில் அஸ்வான் என்கிற இடத்தில் இருந்து கிட்டிய கற்பாறை ஓவியம். [7] பைபிளில் முதன் முதலாக ஒட்டகம் ஆபிரகாம் கதையில் வருகிறது. ஆபிரகாமுக்கு எகிப்திய மன்னனே ஒட்டகங்களைக் கொடுத்ததாக அதில் காணலாம்...!
     
  • கி.மு 2700 - 2500: நெய்யப்பட்ட ஒட்டக மயிர் உடைகள் ஈரானில் இருந்து கிடைக்கின்றன. [8]

இன்று என்சைக்லோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது....
The dromedary was domesticated about 2000–1300 bce in Arabia, the Bactrian camel by 2500 bce in northern Iran and northeast Afghanistan. [9]

தமிழாக்கம்: டிரொமெட்ரி வகை ஒட்டகங்கள் அரேபியாவில் கி.மு 2000 1300 ஆண்டுகளில் பழக்கப்படுத்தப்பட்டது, பேக்டிரியன் வகை ஒட்டகங்கள் கி.மு 2500 ஆண்டுகளில் வடக்கு ஈரானிலும், வட கிழக்கு ஆப்கானிஸ்தானிலும் பழக்கப்படுத்தப்பட்டன.

சிந்திப்போருக்கு: இதையே தானங்க பைபிளும் சொன்னது... பல போராட்டம் போராடி மீண்டும் பைபிளுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் பேசின ஏளன பேச்சுகளுக்கு என்ன பதில். காலம் பதில் சொல்லும்...

இப்பொழுது தேவப்பிரியா சொன்னதைப் படிக்கவும்,

ஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தி பயன்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே தான்.

தேவப்பிரியாவிற்கான கேள்விகள் இதோ,
1) ஒட்டகங்கள் கி.மு 9ஆம் நூற்றாண்டுக்கு (அதாவது பொ.மு 9ஆம் நூற்றாண்டு) பின்பு தான் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டது என்ற உங்கள் கூற்று சுத்த பொய் என்கிறேன். உங்கள் மறுப்பு என்ன?

2) ஒட்டகங்களைப் பற்றி உங்களுக்கு வரலாற்று ஞானம் இல்லை என்கிறேன். உங்கள் மறுப்பு என்ன?

3) ஒட்டகங்களை நீங்கள் சுட்டிக் காட்டியது பைபிளை இழிவுபடுத்தவே, வரலாற்று செய்திகளை ஆராயும் நோக்கில் அல்ல என்கிறேன். எதாவது மறுப்பு?

4) வரலாற்று ஆய்வாளர்கள் சிலரது கூற்றை எடுத்துக் காட்டுவதை மட்டுமே உங்கள் கட்டுரைகளில் காண்கிறேன். பைபிளிற்கு முரணாக‌ அவர்கள் சொன்ன கூற்று உண்மைதானா என நீங்கள் ஆராயவில்லை, ஆராய விரும்பவில்லை. உதாரணத்திற்கு ஃபின்கல்ஸ்டீன் அவர்களது கூற்றைச் சொல்லலாம். உங்களைப் போல என்னாலும் பைபிளிற்கு ஆதாரவான ஆய்வாளர்களின் கூற்றை பலவற்றை எடுத்துக் காட்ட முடியும் (மேலே பார்க்கவும்). எனவே இனியாவது கூற்றை மட்டும் எடுத்துக் காட்டாமல் அதன் உண்மையை ஆராயுங்கள். செய்வீர்களா?

5) அம்மா தேவப்பிரியா! இந்த பதிவிற்காவது பதில் சொல்வீர்களா?

(தேவப்பிரியாவிற்கு: நீங்கள் சொன்ன பிலிஸ்தியர் கதை, கல்தேயர் கதை, சாராள் கதை, இரு கழுதை கதை, வள்ளுவர் கதை என எல்லாவற்றையும் படித்தேன்... நீங்கள் சொன்ன அவை எல்லாம் இறந்து புதைந்த செய்திகள்... வேலைப்பழு காரணமாக தற்போது வலைப்பூ பக்கம் வரமுடியவில்லை... விரைவில் உங்களுக்கு மறுப்பு வெளிவரும்... ஒரு வேண்டுகோள், ஒரு கட்டுரை என எழுதினால் அதில் ஒரு டாப்பிக்கை மையமாக வைத்து எழுதுங்கள்... அப்பொழுது தான் மறுப்பு சொல்ல வசதியாய் இருக்கும்.)

ஆதாரங்கள்:
[1] Finkelstein & Silberman, Neil Asher, 2001, The Bible Unearthed, Free Press: New York, 37.
[2] Redford, Donald B., 1992, Egypt, Canaan, and Israel in Ancient Times, Princeton University Press, Princeton, New Jersey, 277.
[3] Albright, W.F., 1951, The Archaeology of Palestine, Penguin Books, Middlesex, 207.
[4] Potts, Daniel, 2004, “Bactrian Camels and Bactrian-Dromedary Hybrids,” based on Potts, Daniel, 2004, “Camel hybridization and the role of Camelus bactrianus in the Ancient Near East,” Journal of the Economic and Social History of the Orient, 47:143-165.
[5] Archer, Gleason, 1970, “Old Testament History and Recent Archeology from Abraham to Moses” Bibliotheca Sacra 127:505 pp. 3-25, 17.
[6] Davis, John J., 1986 “The Camel in Biblical Narratives,” in A Tribute to Gleason Archer: Essays on the Old Testament, Chicago, Moody Press: pp.141-150, 145.
[7] Ripinsky, 1985, Journal of Egyptian Archaeology 71, 138.
[8] Wapnish, Paula, 1981, “Camel Caravans and Camel Pastoralists at Tell Jemmeh,” Journal of the Ancient Near East Society, 13:101-121, 104-105.
[9] Camel, Encyclopedia Britannica (link)

No comments:

Post a Comment